ஜீவ நீரூற்று ஊழியத்தின் இனணயதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட மனிதனுக்கு கல்வாரி சிலுவையின் மூலமாக கிடைக்கும் சிலாக்கியங்கள் மற்றும் உரிமைகளை தெளிவு படுத்தும் நோக்கத்தோடு இந்த இனணயதளம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. தற்சமயம் இங்கு உள்ள செய்திகள் தமிழில் மட்டுமே உள்ளது. ஆங்கிலத்திலும் இச்செய்திகளை மொழியாக்கம் செய்ய ஏற்ப்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றது. மற்றுமல்லாமல் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் எழுத்து நடை செய்திகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்சியாக ஏற்றம் செய்ய தீர்மானித்து இருக்கின்றோம். இங்கு ஏற்றம் செய்யப்பட்டுள்ள செய்திகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகின்றோம். நீங்கள் இங்குள்ள அனைத்து செய்திகளையும் இலவசமாக இறக்குமதி செய்து கொள்ளலாம்
மற்றுமல்லாமல் அவற்றை எத்தனை நகலாக்கம் வேண்டுமானாலும் செய்து இலவசமாக உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் கொடுக்கலாம். எந்த ஒரு காப்புரிமை தடையும் இதற்கு கிடையாது. மத்தேயு 10:8ல் இயேசு சென்னபடி "இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள் "


